கடந்த 10 ஆண்டுகளில் 310 லட்சம் மெட்ரிக் டன் ஆக உயர்ந்த யூரியா உற்பத்தி!

கடந்த பத்து ஆண்டுகளில் யூரியா உற்பத்தி 310 லட்சம் டன் ஆக உயர்ந்துள்ளது என்ற பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-03-02 09:30 GMT

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத்தில் உள்ள சிந்த்ரியில் உள்ள இந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனத்தின் சிந்த்ரி உர தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2018 ஆம் ஆண்டு இந்த தொழிற்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். தற்சார்பு இந்தியா பயணத்தில் இன்றைய முன் முயற்சியின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கு 360 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுவதாகவும் 2014ல் இந்தியா 225 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே உற்பத்தி செய்து வந்தது என்றும் அவர் கூறினார்.

பெரும் இடைவெளி காரணமாக பெருமளவில் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எங்கள் அரசியல் முயற்சிகள் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் யூரியா உற்பத்தி 310 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆலை தொடங்கப்பட்டதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வழிகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ராமகுண்டம், கோரக்பூர், மற்றும் பரோனி உர தொழிற்சாலைகள் புத்துயிர் பெற்றது குறித்தும் பிரதமர் தெரிவித்தார். இந்த பட்டியலில் சிந்த்ரிரியும் சேர்ந்துள்ளது என்றார் அவர்.

தால்ச்சர் உர தொழிற்சாலையும் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த ஐந்து ஆலைகளும் 60 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும் என்றும் இது இந்தியாவை இந்த முக்கியமான பகுதியில் தற்சார்பை நோக்கி விரைவாக எடுத்துச் செல்லும் என்றும் அவர் கூறினார்.


SOURCE :Kaalaimani.com

Similar News