ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் ஜின்கோவிட் மருந்து !
Uses and benefits of Zincovit tables;

ஒரு நபரின் உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்படும் போது, அந்த நபருக்கு மருத்துவர்கள் ஜின்கோவிட் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர். இந்த மாத்திரையில் வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் துத்தநாகம் போன்றவற்றின் உயர் கலவை உள்ளது. உடலின் நரம்பு மண்டலத்தின் பயனை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, ஜின்கோவிட்டில் உள்ள செலினியம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. உங்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதை பழுதுபார்க்க உதவுகிறது. இதய நோய், நீரிழிவு நோய், காசநோய் மற்றும் வாத நோயாளிகள் மற்றும் கடுமையான நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும் ஊட்டச்சத்து நிரப்பியாக ஜின்கோவிட் மாத்திரைகள் பயன்படுத்தப் படுகின்றது.

ஜின்கோவிட் டேப்லெட் என்பது பல வைட்டமின்கள் அல்லது பல தாதுக்களைக் கொண்ட மாத்திரையாகும். இது உடலில் உள்ள வைட்டமின்களின் குறைபாட்டை சமாளிக்க உதவுகிறது.இந்த டேப்லெட்டில் பின்வரும் கூறுகள் உள்ளன. துத்தநாகம், தாமிரம், மங்கனீன்ஸ், மெக்னீசியம், அயோடின், செலினியம், குரோமியம், மாலிப்டினம் போன்ற தாதுக்களும் உள்ளன. உடலில் வைட்டமின் குறைபாட்டை சமாளிக்க இந்த மாத்திரைகள் எடுத்துக்கொள்ள படுகின்றன. இது தவிர, வேறு சில நோய்களிலிருந்து விடுபடவும் இந்த டேப்லெட்கள் நன்மை பயக்கிறது. ஒருவரின் உடலில் வைட்டமின் குறைபாடுகள் இருந்தால், மருத்துவர்கள் அவர்களுக்கு ஜின்கோவிட் மாத்திரையை பரிந்துரைக்கின்றனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு இந்த மருந்தை உட்கொள்வது நன்மை பயக்கும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைக்கு சிகிச்சையளிப்பதில் ஜின்கோவிட் மாத்திரை நன்மை பயக்கிறது. ஆனால் மருத்துவரின் ஆலோசனை படியே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் அல்லது துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டால், ஜின்கோவிட் மாத்திரையை உட்கொள்வது நன்மை பயக்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை பூர்த்தி செய்ய ஜின்கோவிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்து கண்கள் தொடர்பான பிரச்சினைக்கு மிகவும் நன்மை பயக்கிறது.
Input:https://www.logintohealth.com/blog/en/lifestyle-diseases/uses_of_zincovit_tablet/
Image courtesy: wikipedia