பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோயில்: அம்மன் சிலை காணாமல் போனதால் அதிர்ச்சி!
பிரசித்தி பெற்ற உத்திரகோசமங்கை கோவிலில் அம்மன் சிலை காணாமல் போனதால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி.
பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் உத்தரகோசமங்கையில் உள்ள மங்களேஸ்வரர் மற்றும் மங்களநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மிகவும் பழமையான கோவிலாகும் அறியப்படுகிறது. இந்த கோவிலில் 6 அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை விலைமதிக்க முடியாத பச்சை மரகதக்கல்லால் ஆனது என்றும் கூறப்படுகிறது. திருவாதிரை தினத்தன்று நடராஜன் சிலையின் மீது இருந்த சந்தனம் அகற்றப்பட்டு மரகத மேனியுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இத்தகைய பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தற்போது தானமாக கொடுத்து அம்மன் சிலை மாயம்.
மேலும் இந்தக் கோவிலில் சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் தேர் திருவிழா இந்த கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது. கோயிலில் 7 பட்டர்கள் என அழைக்கக்கூடிய பூசாரிகள் பூஜை செய்து தற்போது வருகிறார்கள். இந்நிலையில் தான் தற்போது இந்த கோவிலில் அம்மன் சிலை காணாமல் போய் இரப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு 2019 அன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த பக்தர்களில் ஒருவரான பிரபு என்பவர் இந்த கோவிலுக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள முக்கால் அடி உயரமுள்ள வராகி அம்மன் வெண்கல சிலையை கோவிலுக்கு தானமாக கொடுத்து இருந்தார் மேலும் மூலஸ்தானத்தில் உள்ள வராக அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்த சிலைக்கும் தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள் அதன்படி தினமும் வராகி அம்மனுக்கு பூஜை செய்யும் இடத்தில் தற்போது வழக்கமாக பூஜை செய்வதற்கு போகும் போது தான் சிலை காணாமல் போயிருப்பது பின்னர் அறிய வந்தது. எனவே தற்போது இது குறித்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: Vikatan news