இந்தியாவின் ஆபரேஷன் காவேரி: மீட்கப்பட்ட பயணிகளுக்கு மஞ்சள் காய்ச்சலா... அதிர்ச்சி தகவல்...

சூடானிலிருந்து ஆபரேஷன் காவேரி மீட்புக் குழு மூலம் மீட்கப்பட்ட 1,191 பயணிகளில் 117 பேர் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி.

Update: 2023-05-01 01:16 GMT

மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகமும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமும், 'ஆபரேஷன் காவேரி' மீட்பு முயற்சியில் சூடானில் இருந்து இந்தியாவைச் சேர்ந்த சுமார் 3,000 பயணிகளை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளை மேற் கொண்டுள்ளன. மீட்டு வரும் பயணிகளுக்குத் தேவையான தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,191 பயணிகள் வந்துள்ளனர். அதில் 117 பயணிகள் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி போடாததால் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து பயணிகளும் அறிகுறியற்றவர்களாக இருந்தால் 7 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.


இவர்களுக்கு விமான நிலைய சுகாதார அதிகாரிகள் (APHO) மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், மாநிலங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மற்றும் மத்திய அரசு ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இலவச உணவு வசதியுடன் தங்குமிடம் வழங்கப்படுகிறது. முதல் குழுவில் 360 பயணிகள் டெல்லிக்கு வந்தனர், இதில் எவரும் தனிமைப் படுத்தப்படவில்லை, அதைத் தொடர்ந்து இரண்டாவது விமானம் ஏப்ரல் 26 அன்று 240 பயணிகளுடன் மும்பைக்கு வந்தது. அதில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். தடுப்பூசி சான்றிதழ் சரிபார்த்த பிறகு இருவர் விடுவிக்கப்பட்டனர்.


மூன்றாவது விமானம் நேற்று பிற்பகலில் பெங்களூரு வந்தடைந்தது. 360 பயணிகளில் 47 பேர் ஆரம்பத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். தடுப்பூசி சான்றிதழ் சரிபார்த்த பிறகு 3 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். மேலும் ஐந்து பயணிகளின் சரிபார்ப்பு நடந்து வருகிறது. நான்காவது விமானம் நேற்று மாலை டெல்லிக்கு 231 பயணிகளுடன் வந்தடைந்தது. அதில் 61 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஐந்தாவது விமானம் இன்று இரவு 367 பயணிகளுடன் டெல்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 320 பயணிகளுடன் கூடுதல் விமானம் நாளை காலை 10:30 மணிக்கு பெங்களூருக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News