கொரோனா தடுப்பூசி Vs பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்: ஒரு பார்வை !

தடுப்பூசி தொடர்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.

Update: 2021-08-08 00:00 GMT

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொள்வது மிகச் சிறந்த ஆயுதமாக இருக்கிறது எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலமாக, கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கும் அபாயத்தை குறைந்தபட்ச அளவு குறைக்க முடியும். எனவே தற்பொழுது கொரோனா தடுப்பூசி Vs பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து பார்ப்போம். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் பெண்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அல்லது தங்களுக்கு தடுப்பூசிகள் மீது இருக்கும் பயத்தின் காரணத்தினாலேயே கொரோனா தடுப்பூசியை அவர்கள் நிராகரிக்கிறார்கள்.  


ஆனால் நாம் அதற்கு பயப்படத் தேவையில்லை. குறிப்பாக பெண்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது ஏனெனில் ஒவ்வொரு பெண்கள் வீட்டின் அஸ்திவாரமாக உள்ளார்கள். அவர்கள் பல்வேறு பதவிகளில் சிலசமயம் அம்மாவாக, மகளாக, அக்காவாக, தங்கையாக, மனைவியாக பல்வேறு பதவிகளை வகிக்கும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவு தான் உள்ளது. எனவே அவர்கள் கட்டாயம் இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக மாதவிடாய் திகழ்கிறது. எனவே மாதவிடாய் சமயத்தில் அவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்று பல்வேறு பெண்கள் தற்போது வரை குழம்புகிறார்கள். அதற்கு மருத்துவ நிபுணர்களின் கருத்து தாராளமாக பெண்கள் மாதவிடாய்ப் போது தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தது தான். அடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். கொரோனா தடுப்பூசி மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆன்டிபாடிகள் குழந்தைகளுக்கும் பால் வழியாக செல்லும் என்பதால் இது குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க ஏற்றது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் WHO ஒப்புதல் அளித்தபடி, கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

Input: https://m.timesofindia.com/life-style/health-fitness/health-news/coronavirus-vaccines-do-covid-19-vaccines-really-delay-your-periods-and-menstrual-cycle-separating-fact-from-fiction/amp_etphotostory/84819736.cms

Image courtesy: wikipedia  


Tags:    

Similar News