தடுப்பூசி போடவில்லை என்றால், இனி இதெல்லாம் கிடையாது ! பாகிஸ்தானின் அதிரடி நடவடிக்கை !
இனி பாகிஸ்தான் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக அந்த நாட்டு அரசு பல்வேறு விதிகளையும் வழிகளையும் கையாண்டு வருகின்றது. இது சில நாடுகள் வரம்பை மீறி சில மக்களின் உரிமைகளை கையிலெடுக்கும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது பாகிஸ்தானில் உள்ள மக்கள் தடுப்பூசி போடுவதை அதிகரிக்கும் பொருட்டு பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடியான முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக தடுப்பூசி போடாதவர்கள் செல்போன் இணைப்பு, சம்பளம், வேலை, பொழுதுபோக்கு என அனைத்து விஷயங்களையும் தடை செய்து அதிரடியாக அறிவித்து உள்ளது.
குறிப்பாக பாகிஸ்தானில் இதுவரையில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. எனவே பாதிப்புக்களை எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு இந்த முடிவை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள்-வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என அதிரடி நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்து நின்று அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்னெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: NDTV news