வரதராஜ பெருமாள் கோவிலில் சிலை கடத்தல் வழக்கு: நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!
சர்வதேச சிலை கடத்தலில் ஈடுபட்ட வந்த சுபாஷ் சந்திர கபுருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை பிரித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த சொந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 2008 ஆம் ஆண்டு 20 சுவாமி சிலைகள் காணாமல் போனது. இந்த சிலைகள் மாயமானது குறித்து சொந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்த விதமான தகவல்களும் கிடைக்காததால் இந்த சிலை கடத்தல் வழக்கு போலீசாரிடமிருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாயமான சிலைகளை குறித்து தீவிர விசாரணையில் களமிறங்கினார்கள்.
இந்த விசாரணையில் வெளிநாட்டில் இந்த சிலை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலை கடத்தல் வடக்கில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசால் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்த சிலை கடலில் ஈடுபட்டு சிலை கடத்தல் மன்னன் என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் வசித்து வந்த சுபாஷ் சந்திர கபூர், சென்னை சேர்ந்த சஞ்சீவி அசோகன், மதுரையை சேர்ந்த மாரிசாமி, ஸ்ரீராம் என்கின்ற நபர் என சுமார் 7 பேர் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஒவ்வொரு கட்டத்தில் விசாரணையின் போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இவர்களுடைய வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் தீர்வை வழங்கிய நீதிபதி இந்த சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூர், அசோகன், மாரிசாமி, ஸ்ரீராம் என்கின்ற நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
Input & Image courtesy: Dinakaran