"பாதிரியார்களைக் கைது செய்ய வாட்டிகன் அனுமதி வேண்டும்" திமுக அமைச்சர் மருமகளின் சர்ச்சை பேச்சு!
உலகின் எந்த ஒரு பகுதியிலும் இருக்கும் ஒரு பாதிரியார் அல்லது சிஸ்டரை கைது செய்வதற்கு முன்பாக போப் ஆண்டவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்
பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்யும் முன்பு வாட்டிகனில் இருக்கும் போப்பாண்டவரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும் தி.மு.க. எம்எல்ஏ ஐபி.செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில் குமார் இக் கருத்தை கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் பாரத மாதாவையும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைதாகி பாளையங்கோட்டை சிறையில் பாவமன்னிப்பு கேட்டு வருகிறார். பாரத மாதாவையும், பாரத பிரதமரையும் அவதூறாக பேசியவரை கைது செய்ததை கண்டிக்கும் விதமாக திமுக அமைச்சரின் மருமகளும் திமுக எம்எல்ஏவின் மனைவியுமான மெர்சி பேசியுள்ளார்.
தேச விரோத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு அண்மையில் உயிரிழந்த நக்சல் ஆதரவாளர் பாதிரியார் ஸ்டனிஸ்லாஸ் லூர்துசாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மெர்சி செந்தில்குமார் பேசுகையில், "இந்தியாவில் கல்வியும் பகுத்தறிவும் பாதிரியார்களும் சிஸ்டர்களும் வந்த பிறகுதான் நமக்கு கிடைத்தது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள் மற்றும் சிஸ்டர்கள் கையில் இருப்பதால் அந்த கல்வி நிறுவனங்களில் துறவரம் பற்றி பாடம் கற்பிக்க வேண்டும். சிஸ்டர்கள் மற்றும் பாதிரியார்களை நாம் ஹீரோ ஹீரோயினாக பார்க்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
very interesting speech :)
— URFD00m (@by2kaafi) July 29, 2021
"கல்வி அறிவும், பகுத்தறிவும் ஃபாதர்ஸ், சிஸ்டர்ஸ் இங்க வந்ததுக்கப்புறம் தான் நமக்கு அதிகம் கிடைச்சுது" 🤣 #clapshttps://t.co/3srkrshnYG
மேலும் "உலகின் எந்த ஒரு பகுதியிலும் இருக்கும் ஒரு பாதிரியார் அல்லது சிஸ்டரை கைது செய்வதற்கு முன்பாக போப் ஆண்டவரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டுள்ளது.
Image courtesy : Twitter