பத்ரகாளியம்மன் கோவில் சுற்றுச்சுவர் கட்டும் விவகாரம்: எதிர்ப்பு தெரிவிக்கும் கிறிஸ்துவ மக்கள்?
வேம்பாரில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் சுற்றுச்சூழல் கட்டும் விவகாரத்தில் இருதரப்பு மக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரியில் அமைந்துள்ளது தான் பத்ரகாளி அம்மன் கோவில். இந்த கோவிலை சுற்றுச்சுவர் கட்டும் விவகாரத்தில் தற்பொழுது இரு தரப்பினர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மற்றொரு தரப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் இருதரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரும் வாக்குவாதம் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்ட பகுதியில் தற்போது போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறார்கள். இந்நிலையில் அருகில் உள்ள தேவாலயத்தை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினர் நிலப் பிரச்சினையை சுட்டிக்காட்டி, சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளித்து போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது, அதனை தொடர்ந்து அதை செயல்படுத்துவதற்காக இந்து மக்கள் சார்பில் போலீஸ் பாதுகாப்புடன் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அங்கு வந்து கிறிஸ்துவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் இருதரப்பினர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. சாதகமாக பேச்சு வார்த்தை நடத்த கோவில்பட்டி உதவி கலெக்டர் அவர்கள் முயற்சி செய்தார். இதில் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் செந்தில்குமார், நகர தலைவர் சிங்கராஜ் ஆகியோர் இதில் பங்கேற்றனர். இதில் இன்று வருவாய்துறை சார்பில் பிரச்சனைக்குரிய நிலம் அளவீடு செய்யப்பட்ட சுமூகமாக தீர்வு இயற்றப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News