பொருளாதார மேம்பாடு குறித்து இளைய சமூகத்தினர் பெருமைப்பட வேண்டும்: குடியரசு துணைத் தலைவர்!
இளைய சமுதாயத்தினர் தங்களது அடிப்படை கடமைகளை திறம்பட ஆற்றவேண்டும்.
இளைய சமுதாயத்தினர் தங்களது அடிப்படை கடமைகளை திறம்பட ஆற்றவேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கூறியுள்ளார். குறிப்பாக, சுற்றுச்சூழலை காப்பது தொடர்பான அடிப்படை கடமையாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். குடியரசு தின அணிவகுப்பில் பங்கு கொண்ட தேசிய நாட்டு நலப்பணிக் குழுவினரோடு கலந்துரையாடல் நிகழ்வின் போது, சமூக மேம்பாட்டுக்காக மாணவர்களின் பங்கு சிறப்பாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.
இந்த தேசிய நாட்டு நலப்பணிக் குழுவில் மாணவர்களுக்காக இணையாக மாணவிகளின் எண்ணிக்கையும் இருப்பது சிறப்பு அம்சமாகும். உலகளவில் தலைமை பொறுப்புகளிலும் இத்தகைய சமன்நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது என்றும், விடுதலைப் பெருவிழாவின் முக்கிய காலக்கட்டத்தில் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்றும் ஜெக்தீப் தன்கர் குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில்நுட்ப சாதனைகள், பொருளாதார மேம்பாடு மற்றும் நல்வாழ்வு திட்டங்கள் குறித்து இளைய சமூகத்தினர் பெருமை கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தினார்.
Input & Image courtesy: News