கொரோனாவை பரப்பிய நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

அந்த வகையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்டா வகை தொற்று அதிகரித்து வருகிறது. அது போன்று வியட்நாமில் தற்போது வரை 5,30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,330 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-09-08 01:08 GMT

கொரோனா தொற்று பரவல் விதிகளை மீறியதாகவும், கொரோனா வைரஸை பரப்பியதற்காகவும் வியட்நாமை சேர்ந்த ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2 ஆண்டுகளாக உலகத்தையே ஆட்டி படைத்து வருகிறது. இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் வழிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. அது போன்ற வழிமுறைகளை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் வியட்நாமில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் முதல் டெல்டா வகை தொற்று அதிகரித்து வருகிறது. அது போன்று வியட்நாமில் தற்போது வரை 5,30,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13,330 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஜூலை மாதத்தில் லீ வான் ட்ரி என்ற 28 வயது இளைஞர் ஹோ சி மின் நகரத்திலிருந்து நாட்டின் தெற்கில் உள்ள தனது சொந்த ஊரான மவ்வுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மற்ற மாகாணங்களில் இருந்து கா மவ்வுக்குள் வருகின்ற அனைவரும் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால் லீ வான் ட்ரி, கா மாவில் சுகாதார பணியாளர்களிடம் வெளியில் இருந்து வருவதை மறைத்துள்ளார். அப்போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி சுகாதார ஊழியர்களுக்கும் தொற்று பரவியுள்ளது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மிகவும் ஆபத்தான நோய்களை பரப்பிய குற்றத்திற்காக லீ வான் ட்ரி என்ற நபருக்கு விசாரணையில் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

https://www.puthiyathalaimurai.com/newsview/115072/Vietnam--Man-gets-five-years-in-jail-for-spreading-Covid

Tags:    

Similar News