விநாயகர் கோவில் இடித்து அகற்றம் - பொதுமக்கள் எதிர்ப்பால் ஏற்பட்ட பரபரப்பு!
தண்டையார்பேட்டையில் விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தண்டையார்பேட்டையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பெயரில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த விநாயகர் கோவில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் தற்பொழுது ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. சென்னை தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் சுந்தரம் பிள்ளை நகர் உள்ளது. இங்கு 20 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து சுமார் 300 சதுர அடியில் சுந்தர விநாயகர் கோவிலை கட்டி இருக்கிறார்கள்.
இந்த கோவில் நிலம் மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்டு வருவதாகவும், இவற்றை அகற்ற வேண்டும் என்று கூறி 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு தடை கேட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அவற்றை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டி உள்ள கோவிலை வருகின்ற 30ஆம் தேதிக்குள் இடித்து அகற்றிவிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநகராட்சிக்கு உத்தரவிடப் பட்டிருக்கிறது. மேலும் அதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று வேலையை தொடங்கினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மக்கள் திரளாக அங்கு கூடினார்கள். 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் கோவில் முன்பு அமர்ந்து ஈடுபட்டதால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக 300 மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamalar