விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெறிமுறைகளை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாடங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடங்களில் 25 பேர் மேல் கூடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,சிலைகளை கரைக்க செல்லும் ஊர்வலங்களுக்கு தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி பெற்றாமல் சிலைகளை வைக்ககூடாது எனவும் அதையும் மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி நெறிகாட்டு முறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுப்பட வேண்டும் என அரசு அரசு கேட்டுகொண்டுள்ளது.