திருப்பதி கோயிலில் விஐபி தரிசன முறை ரத்தாகிறது! அனைத்து பக்தர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்!!

திருப்பதி கோயிலில் விஐபி தரிசன முறை ரத்தாகிறது! அனைத்து பக்தர்களுக்கும் சம வாய்ப்பு கிடைக்கும்!!

Update: 2019-07-17 07:25 GMT


திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. அதற்கு இடையூறாக இருக்கும் வி.ஐ.பி. தரிசன முறை விரைவில் நீக்கப்பட உள்ளது.


திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் எவ்வித கட்டணமும் இல்லாத, தர்ம தரிசன வரிசை உள்ளது. இதில் குறைந்தபட்சம் 6 - 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க முடியும். இது தவிர கட்டண தரிசனம், வி.ஐ.பி.,கள் தரிசனம் போன்ற தரிசன முறைகளும் உள்ளன. வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் வி.ஐ.பி.களின் அந்தஸ்துக்கு ஏற்ப பொது தரிசன வரிசை தடுத்து நிறுத்தப்படும்; வி.ஐ.பி.கள் நிதானமாக தரிசனம் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும்.


தினமும், நான்கைந்து முறை, வி.ஐ.பி., தரிசன வசதி அளிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் தர்ம தரிசனம் மற்றும் பிற வரிசைகளில் வருவோர் அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. 


திருப்பதிக்கு வரும் வி.ஐ.பி.கள் எல் - 1, எல் - 2, எல் - 3 என்ற பிரிவுகளில் வகைபடுத்தப்படுகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் போன்றோர் எல் - 1 பிரிவில் வருகின்றனர். மூத்த அரசு அதிகாரிகள் எல் - 2 பிரிவில் வருகின்றனர். வி.ஐ.பி.கள் மற்றும் திருப்பதி - திருமலை தேவஸ்தான நிர்வாகிகளின் சிபாரிசு கடிதங்களை பெற்றுள்ளவர்கள் எல் - 3 பிரிவில் வருகின்றனர்.


இந்த நிலையில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Similar News