மனதின் குரல் 110 வது நிகழ்ச்சி - பெண் சக்தியின் பெருமையும் முதல் வாக்காளர்களுக்கு மோடியின் அறிவுரையும்!
முதல் முறை வாக்காளர்கள் ஓட்டு போடுவதில் சாதனை படைக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 110 வது 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
சில நாட்கள் கழித்து மார்ச் எட்டாம் தேதி நாம் பெண்கள் தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த விசேஷமான நாள் தேசத்தின் வளர்ச்சி பயணத்தில் பெண் சக்தியின் பங்களிப்பை போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப் பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதி கூறியுள்ளார். இன்று பாரதத்தின் பெண் சக்தி என்பது அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யாராவது கற்பனை செய்திருப்பார்களா? ஆனால் என்று அது சாத்தியமாகி இருக்கிறது கிராமங்கள் தோறும் 'ட்ரோன் தீதீ' என்ற பெண்களைப் பற்றிய பேச்சாக இருக்கிறது.
இந்த தேசத்தில் பெண் சக்தி பின்தங்கி இருக்கும் துறை எதுவும் இல்லை. பெண்கள் தங்கள் தலைமை பண்பு காரணமாக மிகச்சிறப்பான வகையில் செயல்பட்டுள்ளனர். தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் பெண்கள் இப்போது இயற்கை விவசாயத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்கள் கழித்து மார்ச் மூன்றாம் தேதி உலக வன உயிரின நாள் வர உள்ளது. வன உயிரினங்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கே கிராமத்துக்கும் வனத்துக்கும் இடையிலான எல்லையில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கிராமத்துக்கு அருகே புலி ஏதேனும் வரும் போது செயற்கை நுண்ணறிவின் உதவியால் அந்த பகுதி மக்களின் கைபேசியில் எச்சரிக்கை ஒன்று அளிக்கப்படும்.
புலிகள் சரணாலயம் அருகே உள்ள 13 கிராமங்களில் இந்த அமைப்பு காரணமாக மக்களுக்கு வசதியாக இருப்பதுடன் புலிகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று யாரிடம் செல் பேசி இருக்கிறதோ அவர் ஒரு உள்ளடக்க விஷயங்களை உருவாக்குபவராக ஆகிவிட்டார். இவர்களுடைய வல்லமைக்கு மதிப்பளிக்கும் வகையில் தேசிய படைப்பாளிகள் விருது உருவாக்கப்பட்டுள்ளது. சில நாட்கள் முன்பாக 'என்னுடைய முதல் வாக்கு தேசத்தின் பொருட்டு' என்ற இயக்கத்தை தேர்தல் கமிஷன் தொடங்கியது.