உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. தினமும் முக்கிய நகரங்களை கைப்பற்றி ரஷ்ய படைகள் முன்னேறி செல்கிறது. வான், கடல், தரை வழி என்று குண்டுமழையை ரஷ்ய படைகள் பொழிந்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் பயத்தில் நடுங்கி வரும் நிலையில் தனது தாக்குதலை நிறுத்தாமல் ரஷ்ய நடத்தி வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இன்னும் 40 லட்சம் பேர் வெளியேறலாம் என ஐரோப்பிய யூனியன் கருத்து கூறியுள்ளது.
மேலும், ரஷ்ய படைகள் ஏவுகணை மூலம் முக்கிய இடங்களை அழித்து வருகிறது. குறிப்பாக அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் தனது தாக்குதலை தொடர்ந்து வருவதால் ஐரோப்பிய நாடுகள் கதிகலங்கி நிற்கிறது. அணுஉலை வெடித்தால் அண்டை நாடுகளுக்கும் அதன் தாக்கம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், இன்று 11வது நாளாக ரஷ்ய படைகள் போரை தொடர்ந்து வருவதால் உக்ரைன் ராணுவம் கதிகலங்கி நிற்கிறது. உலக நாடுகள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு அதிபரும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றார். அதே சமயம் இந்தியா போன்ற வல்லரசு நாடுகள் நினைத்தால் போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றி அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமித்ரோ குலேபா தொலைக்காட்சியில் பேசியதாவது:
உக்ரைன் நாட்டில் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கின்றோம். அதே சமயம் வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றுவதற்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம். இன்னும் சிலரை மீட்பதற்கு ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும். போரில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாக கருதுகிறது. நாங்கள் தொடர்ந்து எங்களின் நிலத்தை காப்பதற்கு போரிடுவோம். அதே சமயம் இந்தியா போன்ற வல்லரசு நாடு நினைத்தால் போரை நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Daily Thanthi
Image Courtesy: CNN