கண்ணியமான வாழ்க்கை, தரமான வாழ்க்கை , முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பு :இவையே எங்கள் நோக்கம்- பிரதமர் மோடி!

தமிழ் மொழியின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்ணியமான தரமான வாழ்க்கையை உருவாக்குவதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுமே எங்கள் நோக்கம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-04-15 06:14 GMT

பிரதமர் மோடி நேற்று பா. ஜனதா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். பிறகு அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது:-

மோடியின் உத்தரவாத ஆவணமாக பாஜக தேர்தல் அறிக்கையை நாட்டு மக்களுக்கு வெளியிடுகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு அம்சத்தையும் உத்தரவாதமாக பாஜக நிறைவேற்றி இருக்கிறது .அந்த வகையில் தேர்தல் அறிக்கை புனித தன்மையை நிலை நிறுத்தி உள்ளது. வளர்ந்த பாரதத்தில் நான்கு வலிமையான தூண்களான இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோருக்கு பாஜக தேர்தல் அறிக்கை அதிகாரம் அளிக்கிறது.

கண்ணியமான வாழ்க்கை, தரமான வாழ்க்கை, முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்பு ஆகியவைதான் எங்கள் நோக்கம் .உலகம் நிச்சயமற்ற காலத்தின் வழியாக சென்று கொண்டிருக்கிறது .அதனால் முழு பெரும்பான்மை கொண்ட நிலையான அரசின் அவசியம் அதிகரிக்கிறது. ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியை பாஜக தொடங்கும் .

'ஒரே நாடு ,ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்துவதை நோக்கி பணியாற்றத் தொடங்குவோம். பொது சிவில் சட்டம் நாட்டு நலன் சார்ந்தது ஆகும். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும் உலகின் மிகப் பழமையான தமிழ் மொழி நமது பெருமை கூறியது தமிழ் மொழியின் உலகளாவிய நற்பெயரை பெருமையே உயர்த்த எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI


Similar News