மேற்கு வங்காளத்தில் கொடூரம் : வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கும் பாஜக மலை - அரசியல் படுகொலையா? #WestBengal #BJP

மேற்கு வங்காளத்தில் கொடூரம் : வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கும் பாஜக மலை - அரசியல் படுகொலையா? #WestBengal #BJP

Update: 2020-07-13 06:13 GMT

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பா.ஜ.க. MLA தேபேந்திர நாத் ராய் இன்று காலை உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் பிண்டலில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரது மரணம் குறித்து ட்வீட் மூலம் மாநில பா.ஜ.க. சந்தேகம் எழுப்பியுள்ளது. 



"அவர் முதலில் கொல்லப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டார் என்று மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்" என்று மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைமை ட்வீட் செய்தது. 2016 ஆம் ஆண்டில் CPI (M) டிக்கெட்டில் உத்தர தினாஜ்பூரில் உள்ள ஹெம்தாபாத் தொகுதியில் இருந்து ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் மே 2019 இல் வேறு சில MLAக்களுடன் பா.ஜ.க. வில் சேர்ந்தார்.

ஹெம்தாபாத் ஒரு CPI (M) கோட்டையாக இருந்தது, ராய் தன்னுடன் போட்டியிட்ட திரிணாமுல் போட்டியாளரை 2016ல் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கேரளாவிலும் மேற்குவங்கத்திலும் RSS, BJP உறுப்பினர்கள் அரசியல் படுகொலைகள் செய்யப்படுவது வழக்கமாகி வந்த நிலையில், ஒரு MLAவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசு தலையிட்டு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.

Similar News