உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் நிச்சயம் பெரிய பிரச்சனை உண்டு !

What are the causes of anorexia nervosa?

Update: 2021-08-29 01:26 GMT

அனோரெக்ஸியா (பசியற்ற தன்மை) என்பது ஒரு வகை உணவுக் கோளாறு ஆகும். இது 'அனோரெக்ஸியா நெர்வோசா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை நோயில் மக்கள் தங்களின் உடல் எடை குறித்து ஒரு தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். மேலும் இதன் தாக்கத்திற்கு ஆளானவர்கள் தங்களின் உடல் எடையைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். மேலும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் தங்களின் உடல் எடையைக் குறைக்க முடியும் என நம்புகின்றனர். 


அனோரெக்ஸியா என்பது பசியற்ற தன்மையை உண்டாகும் ஒரு மன கோளாறு, இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களின் உடல் எடையை கட்டுப்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர். இந்த மன நிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் உணவுக் கட்டுப்பாடு மற்றும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்குகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், உணவு உட்கொள்வது தங்களை பருமனாக மாற்றும் என நினைக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களின் உணவு பழக்கத்தை மாற்றுகிறார்கள். இதனால் அவர்களின் உணவு அட்டவணை பொருத்தமற்றதாக மாறுகிறது. 


அனோரெக்ஸியா ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. மேலும், இது மற்ற நோய்களைப் போல பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. சிலருக்கு மரபணு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பசியற்ற தன்மை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய சூழலில் மக்கள் வெளிநாட்டு கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பான்மையான மக்கள் மெலிதாக மாற எண்ணி அனோரெக்ஸியாவுக்கு ஆளாகின்றனர். 

Input:https://www.news-medical.net/news/20210818/Research-redefines-dieting-and-the-culture-of-weight-loss.aspx

Image courtesy:wikipedia


Tags:    

Similar News