பருவநிலை மாற்றத்தின் போது கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் !

What to eat in winter season?

Update: 2021-11-02 00:30 GMT

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் முடிந்து பின், குளிர்காலம் தொடங்குகிறது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் ​​மக்கள் அதிக குளிர்ச்சியை உணர்கிறார்கள். குளிர்காலத்தில் சூடான உடைகள் உடுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியமாகிறது. ஏனெனில், குளிர்காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும், மக்கள் சளி, இருமல், காய்ச்சல், தோல் வறட்சி போன்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற, சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். 


ப்ரோக்கோலியில் ஏராளமான ஊட்டசத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இவை உடலை பொறுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. குளிர்காலத்தில் ப்ரோக்கோலியை உட்கொள்வதன் மூலம், ஐலதோஷப் பிரச்சினையை ஒழிக்க முடிகிறது. ப்ரோக்கோலி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மேலும் மாதுளை இதில் அதிக அளவில் இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் A ஆகியவை உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்கவும், புதிய இரத்தத்தை உருவாக்கவும் உதவுகின்றன. மேலும், இது இரத்த சோகையை குணப்படுத்துகிறது. மாதுளை உடலின் பலவீனத்தை குறைத்து உடலை குளிர்ச்சியிலிருந்து தடுக்கிறது. மாதுளையை உரித்து சாப்பிடுங்கள் அல்லது மாதுளை சாற்றை உட்கொள்ளலாம். 


பாதாம் உலர்ந்த பழ வகைகளுள் ஒன்றாகும்,இது உடலுக்கு நல்ல அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. மேலும், இவை உடலின் பலவீனத்தைக் குறைக்கும் சில சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குளிர்காலத்தின் போது, உண்டாகும் குளிர்ச்சியைத் தடுக்க இரவில் ஊறவைத்த பாதாமை அதிகாலையில் சாப்பிடுங்கள். இருப்பினும், பாதாமை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.மஞ்சள் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், பல்வேறு வகையான தோல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. குளிர்காலத்தில், குளிர்ச்சியைத் தவிர்க்க நல்ல அளவில் மஞ்சளை உணவில் பயன்படுத்தப்பட வேண்டும். 


இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன, இவை உடலின் பலவீனம் மற்றும் சோர்வைக் குறைக்கிறது. பெரும்பான்மையான மக்கள் குளிர்காலத்தில் இஞ்சி தேநீரைக் குடிக்க விரும்புகிறார்கள். ஏனெனில், இஞ்சி குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. குளிர்காலத்தில் தினசரி வேகவைத்த முட்டைகளை சாப்பிட வேண்டும். ஏனெனில், இது உடலை பலப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை நல்ல அளவில் கொண்டுள்ளது. குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள் குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் பெற முட்டைகள் உட்கொள்வதை விரும்புகிறார்கள். கேரட்டில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் பலவீனத்தை குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கேரட்டை சூப்பாகவும், பச்சையாகவும், சாலட்டில் சேர்த்தும், கேரட் ஜூஸ் ஆகவும் உட்கொள்ளலாம். 

Input & Image courtesy:Logintohealth

 


Tags:    

Similar News