தூக்கமின்மை பிரச்சனையை போக்க உதவும் இயற்கையான மருந்து !
What are the nutritional importance of Mace.
ஜாதிபாத்ரி உணவின் நறுமணத்தை அதிகரிக்க உதவும் ஒரு வகை மசாலா பொருளாகும். இது ஜாதிக்காய் வகையைச் சேர்ந்தது ஆகும். பிற மசாலாப் பொருள்களைப் போலவே, இதிலும் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. ஜாதிபாத்ரியின் விதைகள் வெளிர் மஞ்சள் காணப்படுகின்றன. இது உணவின் சுவையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. ஜாதிபாத்ரியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு வகையான கோளாறுகளின் அபாயத்தை குறைக்கிறது. தற்போதைய காலகட்டத்தில் தூக்கமின்மை பிரச்சினையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். தூக்கமின்மை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டமாகும். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்காக ஏராளமான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
இருப்பினும் அவர்களால் தூக்கமின்மை பிரச்சினையிலிருந்து விடுபட முடியவில்லை. எந்தவித மருந்துகளும் பயனளிக்காத போது, தூக்கமின்மைக்கு சில வீட்டு வைத்தியங்கள் பயனுள்ளதாக அமைகிறது. இத்தகைய சூழளில், ஜாதிபாத்ரி ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகிறது. ஏனெனில், தூக்கத்தை மேம்படுத்தும் சில பொருட்கள் இதில் உள்ளன. செரிமானம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஜாதிபாத்ரி நன்மை பயக்கிறது. இது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கிறது. பெரும்பான்மையான மக்கள் குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, குளிர்ச்சியைத் தடுக்க ஜாதிபாத்ரியை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், ஜாதிபாத்ரியில் ஆன்ட்டி அழற்சி பண்புகள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் உள்ளன.
ஜாதிபாத்ரி உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும் சில சமயங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவை, தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஜாதிபாத்ரி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் ஜாதிபாத்ரியை உட்கொள்ளக்கூடாது. மேலும், அதன் நுகர்வு குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். ஜாதிபாத்ரியை உட்கொள்வதினால் உடலில் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள், இதனை உட்கொள்ளக் கூடாது. மேலும், குறைந்த அளவில் ஜாதிபாத்ரியை எடுத்துக் கொண்டால் உடலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. இதன் அதிகப்படியான உட்கொள்ளல் தீங்கு விளைவிக்கக்கூடும்.
Input & Image courtesy:logintohealth