முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் எப்போது? - திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு!

Thirupathi Dharshan

Update: 2022-04-25 13:45 GMT

மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாளை (26/04) சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் மே மாதத்திற்கான ஏழுமலையான் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.


தரிசனம் செய்ய வரும் மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ் மாற்றுத்திறனாளிகள் ஆக இருப்பின் அதற்கான சான்றிதழ் நீண்ட கால தீராத நோயுள்ளவர்கள் ஆக இருப்பின் அதற்கான மருத்துவச் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன் பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரானோ தடுப்பூசி 2 டேஸ் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என முன்பே திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


திருப்பதியில் நேற்று 67,347 பக்தர்கள் தரிசனம் செய்தனர், 29,440 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூபாய் 4 கோடியே 28 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தற்போது நிலவரப்படி 4 மணி நேரம் ஆகிறது.

Tags:    

Similar News