132 நாடுகளை ஆக்கிரமித்த டெல்டா வகை வைரஸ்: WHO தகவல் !
தற்போது வரை சுமார் 132 நாடுகளை ஆக்கிரமித்து செய்துள்ளது டெல்டா வகை வைரஸ்கள்.
உலகில் பெரும்பாலான நாடுகளில் தற்பொழுது பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வைரஸரசாக டெல்டா இருந்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் டெல்டா வைரஸ் இதுவரை 135 நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு(WHO) தற்பொழுது தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பின்படி, "முதல் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் இதுவரை 132 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிக அளவில் பரவி வருகிறது.
கடந்த வாரங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் டெல்டா வகை பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதில் மேற்கு பசிபிக் பகுதிகளில் மட்டும் 33 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கு நாடுகளில் 37 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவில் 9% பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் உலக அளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சம் பேருக்கும், இந்தியா, இந்தோனேசியாவில் 2 லட்சம் பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது. டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Input: https://in.news.yahoo.com/beta-variant-france-spain-travel-list-amber-red-green-163455443.html
Image courtesy: Yahoo News