வளர்ந்த நாடுகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி: ஏழை நாடுகளில் நிலை என்ன? WHO கேள்வி !
வளர்ந்த நாடுகள் தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர். அப்படியிருக்கையில் ஏழை நாடுகளுக்கு என்னவாக இருக்கும் என்று WHO கேள்வியை எழுப்பியுள்ளது.
வளர்ந்த நாடுகளில் தற்போது தங்களுடைய மக்களை தொற்று நோயில் இருந்து பாதுகாப்பதற்காக இரண்டு டோஸ் தடுப்பூசிகளை தவிர தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசிகளையும் செலுத்திக் கொண்டு வருகின்றது. பல நாடுகள் உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்த செய்தி வெளியிட்ட பிறகும் கூட தங்களுடைய நாடுகளுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி அல்லது மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி மக்களுக்கு தொற்று நோயில் இருந்து பாதுகாப்பு வழங்கும் என்பது தற்போது வரை நிச்சயமில்லாத ஒன்றுதான். ஆனால் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவதற்கு மூலமாக நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு குறிக்கோள்.
அந்த வகையில் உலக நாடுகள் அனைத்திற்கும் தற்போது செலுத்திவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை நிறுத்தி வைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கேட்டு இருந்தது. இருந்தாலும் பல நாடுகள் அதை மீறி தங்களுடைய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வளர்ந்த நாடுகளிடம் உள்ள தடுப்பூசி மிச்சங்களை கொண்டு ஏழை நாடுகள் தங்களின் தேவையை நிறைவேற்றி கொள்ளட்டும் என்ற மனப்பான்மை ஏற்புடையது அல்ல என்றும் உலக சுகாதார அமைப்பு தற்பொழுது அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "வளர்ந்த நாடுகள் தற்பொழுது, தங்களுடைய மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போக மீதமுள்ள தடுப்பூசிகளை தான் ஏழை நாடுகளுக்கு கொடுக்கின்றனர் எனவே இதன் காரணமாக பெரும்பாலான ஏழை நாடுகளில் தற்போது வரை மக்கள் தடுப்பூசிகளை செலுத்த இயலாத சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதனால், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு உள்ளன" என்றும் அவர் கூறியுள்ளார்.
Input & image courtesy: Hindustan Times