இதுவும் நடக்கும்! இன்னமும் நடக்கும்! அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபர் ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு !

Taliban leader Mullah Hasan Akhund nominated as head of Afghan

Update: 2021-09-09 01:45 GMT

Taliban leader Mullah Hasan Akhund nominated as head of Afghan

ஆப்கானிஸ்தானில் இடைக்கால பிரதமராகிறார் முல்லா ஹசன் அகுந்த். அமெரிக்க காவல்துறையால் தேடப்படும் நபரான சிராஜூதீன் ஹக்கானி ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய ஒரு வாரத்துக்குப் பின் தலிபான்கள் இடைக்கால அரசுக்கான பிரதிநிதிகளை அறிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக, அமெரிக்க படைகளுக்கு எதிராக போராடிய முக்கிய தலைவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமராவார் என எதிர்பார்க்கப்பட்ட, முல்லா அப்துல் கனி பரதர் முதலாவது துணை பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் முல்லா அப்துல் கனி பரதர்.

இரண்டாவது, துணை பிரதமராக முல்லா அப்துல் சலாமும், முல்லா உமரின் மகனான முல்லா முகம்மது யாகூப் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜூதீன் ஹக்கானி, அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கான் புதிய அரசு அமைவதில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் இயக்குநர் பயஸ் ஹமீது, கடந்த வாரம் காபூல் பயணம் மேற்கொண்ட நிலையில், புதிய அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News