யார் முட்டாள்? மு.க.ஸ்டாலினா? தமிழர்களா? - அடுத்த மாதம் விடை தெரியும்!

யார் முட்டாள்? மு.க.ஸ்டாலினா? தமிழர்களா? - அடுத்த மாதம் விடை தெரியும்!

Update: 2019-12-14 10:41 GMT


பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் மதவெறியின் காரணமாக துரத்தி அடிக்கப்பட்டு, இந்தியாவிற்கு அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், பாரிசிகள், சீக்கியர்கள், ஜெயின்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது.


இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது‌. பின்னர் இந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத நிலையிலும், 125 எம்பிக்கள் ஆதரவுடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறை வேற்றப்பட்டது.


இதனைத்தொடர்ந்து இந்த மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ஒப்புதலுக்கு பிறகு, இது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது.


இந்த சட்டத்தை வைத்து இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் ஆதரவை பெறுகின்ற உள்நோக்கத்தோடு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன.


இருப்பினும் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில் எந்தவிதமான பெரிய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. திமுக இந்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால் மக்கள் இதை கண்டுகொள்ளவில்லை. இதுபோலத்தான் மற்ற மாநிலங்களிலும் நிலவரம் உள்ளது.


இந்த நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பேக்கல் போன்றவர்கள் அறிவித்துள்ளனர்.


இந்தியாவின் குடியுரிமை தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடமே உள்ளது. மாநில அரசுக்கு இதில் எந்த வேலையும் இல்லை. ஒருவருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டுமா? கூடாதா? என்பதை முடிவு செய்யும் இடத்தில் மத்திய உள்துறை உள்ளது. மத்திய உள்துறை அனுமதித்து குடியுரிமை வழங்கப்பட்ட ஒருவரை, எந்த மாநில அரசும் தடுத்து நிறுத்திவிட முடியாது.


இந்த குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் ஒரு மாநிலத்தின் முதல்வராக யாரும் அமர்ந்துவிட வாய்ப்பில்லை. ஒருவேளை அவர்களுக்கு இந்த சட்ட விவரங்கள் தெரியாமல் இருந்தால்கூட அதிகாரிகள் இதனை தெளிவு படுத்தி விடுவார்கள். எனவே முதல்வர்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை பற்றியும், அதன் நடைமுறை விதிகள் குறித்தும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.


அப்படியிருந்தும் கேரள முதல்வர் பிணராயி விஜயன் முதல் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி வரை “எங்கள் மாநிலத்தில் இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” என்று சொல்கிறார்கள் என்றால், மக்களை எந்த அளவிற்கு முட்டாள்கள் என்று நினைத்து செயல்படுகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது. 
அதிலும் குறிப்பாக இந்த அறிவிப்பின் மூலம் அந்தந்த மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில், அவர்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு, இதுபோன்ற முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.


ஆனால் சாதாரண மக்களுக்கு, சட்ட நுணுக்கங்களை உடனுக்குடன் கற்றுக்கொடுத்து விடுகிறது, சமூக ஊடகங்கள். உடனடியாக அவர்களுக்கு திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பான அனைத்து தகவல்களும் சேர்ந்து விட்டது.


இந்த விஷயத்தில், யார் முட்டாள் என்பது அடுத்து வருகின்ற தேர்தல்களில் வெளிப்படையாக தெரியும்.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தமட்டில், முஸ்லிம்களின் ஓட்டுகளுக்காக அவர்களை முட்டாளாக்கி குளிர்காய மு.க.ஸ்டாலின் வகையறாக்கள் களமிறங்கியுள்ளனர். ஆனால் உள்ளாட்சித் தேர்தலில், நிச்சயமாக திமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்க உள்ளது. எனவே தமிழர்கள் முட்டாள்களா? அல்லது மு.க.ஸ்டாலின் முட்டாளா? என்பது அடுத்த மாதமே தெரிந்துவிடும்.



Similar News