கொரோனாவை அடுத்து கினியாவில் மற்றொரு வைரஸ்: WHO எச்சரிக்கை !

ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது மற்றொரு வைரஸ்- WHO எச்சரிக்கை.

Update: 2021-08-11 13:47 GMT

உலக முழுவதையும் தற்பொழுது தன்னுடைய கோரப்பிடியில் வைத்துள்ள கொரோனாவை அடுத்து, தற்பொழுதுமேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் இந்த வைரஸில் கொரோனா வைரஸ் போன்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வைரஸ்களை ஒன்றாக அறியப்படுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய எச்சரிக்கையை உலக நாடுகளுக்கு விடுத்தும் உள்ளது குறிப்பாக பாதிக்கப்பட்ட நாடான ஆப்பிரிக்கா நாட்டில் இது மேலும் மக்களுக்கு பரவி உள்ளதா? என்பது போன்ற ஆய்வு மேற்கொள்ளவும் வலியுறுத்தி உள்ளது. 


இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாக அதிகாரிகள் கூறுகையில், மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவில் லைபீரிய எல்லையில் உள்ள குய்கெடோவில் ஒருவரிடம் எபோலா போன்ற மார்பர்க் என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் பலியான நிலையில், அவருடன் தொடர்பில் இருந்த மேலும் நால்வருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். எனவே இதுகுறித்து மக்கள் தற்போது அச்சப்படத் தேவையில்லை. முடிவுகள் வந்த பிறகு தான் எதையும் சொல்ல முடியும். இப்பகுதியில் எபோலா வைரஸ் தடுப்பு பணிகளில் பங்கேற்ற எங்கள் குழுவினர் தற்போதும் உள்ளனர்.


அவர்கள் புதிய வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவா? எங்கு சிகிச்சை பெற்றார்? என்பதை கண்டறியும் பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த வைரஸ் கொரோனாவை அடுத்து கொஞ்சம் வேகமாக மற்றவர்களுக்கு பரவ கூடிய வைரஸ் ஆக இருக்குமா? என்பது தொடர்பான ஆய்வுகளும் நடந்து வருகின்றன கூடிய விரைவில் இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று அவர் கூறி உள்ளார். 

Input: https://www.bbc.com/news/world-africa-58156499

Image courtesy: BBC news


Tags:    

Similar News