கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுமா? பின்னணி பிரச்சினை என்ன?

அரசு கட்டுப்பாட்டில் இருந்த கோவில்கள் விடுவிக்கப்படாத பின்னணி பிரச்சினை என்னவாக இருக்கும்.

Update: 2022-03-22 02:39 GMT

இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் தான் தற்பொழுது இந்து கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களுக்கு ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்குப் பிறகு பா.ஜ.க அரசு இதை சாதித்துள்ளது. கோவில்கள் அரசு கட்டுப்பாட்டில் வந்தது ஏன்? இந்து கோவில்கள் மட்டும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கிறது. மசூதிகள் சர்ச்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை? என்று போன்ற பல்வேறு கேள்விகளும் தற்போது சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடக விழுந்ததைப் போன்று மற்ற மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கோவில்கள் விடுவிக்கப்படுமா என்ற கோரிக்கையை அனைத்து மாநில மக்களும் தற்பொழுது முன்வைக்க ஆரம்பித்துள்ளார்கள். 


சமீபத்தில் கூட பவன்கல்யாண் அவர்களின் விடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் பார்வையாளர்களை பெற்றுள்ளது. கோவில்களில் இருந்து வரும் பல்வேறு வருமானங்களை தவறான நபர்களின் கைகளுக்கு செல்வதால்தான் இத்தகைய கேள்விகளை எழுப்ப வேண்டிய ஒரு தருணம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் கூட நில அபகரிப்பு, கோவில் பணம் கொள்ளை போதல் போன்ற பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. 


எனவே தற்போது இந்து மக்கள் பல்வேறு கேள்விகளை கேட்க ஆரம்பித்து உள்ளார்கள். இவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது கோவில்களை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஒவ்வொரு தடவையும் சுதந்திரமான கோவில்களுக்கு பெரும் குரல் எழுப்பப்படும், கமிட்டிகள், நாத்திகர்கள் மற்றும் மேலும் பல்வேறு நபர்களின் கருத்துக்களை ஊடகங்கள் கடுமையாக எதிர்க்கின்றன.  

Input & Image courtesy: Twitter Source

Tags:    

Similar News