50 வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டிய சிகிச்சை !

Why is colonoscopy done?

Update: 2021-12-06 00:30 GMT

பொதுவாக கொலோனோஸ்கோபி என்பது, பெருங்குடலில் ஏதேனும் கோளாறுகள் உள்ளனவா? என்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு செயல்முறையாகும். இரைப்பைக் குடலியல் நிபுணர்களே இந்த கொலோனோஸ்கோபி மதிப்பீட்டைச் செய்யும் திறம் கொண்டவர்களாக இருப்பார்கள். கொலோனோஸ் கோபியின் போது நோயாளின் ​குடலுக்குள் நான்கு அடி நீளம் உள்ள ஒரு நெகிழ்வான குழாய் செலுத்தப்படுகின்றது. இது கொலோனோஸ்கோபி குழாய் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக பெருங் குடல்களில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறிய இந்த போரில் பயன்படுத்தப் படுகிறது. 


கொலோனோஸ்கோபி குழாயில் ஒரு சிறிய கேமரா மற்றும் ஒரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது, இதன் உதவியுடன் நோயாளியின் பெருங்குடலுக்குள் உள்ளவற்றை மருத்துவர்கள் நன்றாக பார்க்க முடிகிறது. பெருங்குடலில் உள்ள பாலிப்ஸ் மற்றும் சிக்கல்களை உண்டாக்கும் பிற வகை திசுக்களையும் கொலோனோஸ்கோபியின் உதவியுடன் அகற்ற இயலும். மேலும், கொலோனோஸ்கோபி நடைமுறையின் போது அகற்றப்படும், இந்த திசுக்களை செகரித்து நிபுணர்கள் ஆய்வகங்களில் பரிசோதிக்கின்றனர்.


குடல் பிரச்சினைகளை மற்றும் வயிற்று வலி, இரத்தப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற குடல் பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிய கொலோனோஸ்கோபி செய்யப்படுகிறது. 50 வயதைத் தாண்டிய பெரியவர்கள் ஆரோக்கியமாக இருப்பினும், வருடத்திற்கு ஒரு முறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனையை செய்ய மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றனர். பெருங்குடல் புற்றுநோய்க்கான பரிசோதனைகளில் கொலோனோஸ்கோபி ஒரு முக்கிய செயல்முறையாகும். பெருங்குடலுக்குள் உள்ள பாலிப்களை பரிசோதிக்க, மருத்துவர்கள் கொலோனோஸ்கோபியை பரிந்துரைக்கின்றனர். இந்த பரிசோதனையின் மூலம் பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது.

Input & Image courtesy:Logintohealth




Tags:    

Similar News