கடுமையான முதுகெலும்பு வலியினால் செய்யப்படும் இந்த சிகிச்சை பற்றிய தகவல்.!

Why is laminectomy done?

Update: 2021-10-07 00:45 GMT

லேமினெக்டோமி என்பது ஒரு வகை அறுவை சிகிச்சை இதனை டிகம்பரஷ்ஷன் அறுவை சிகிச்சை என்றும் அழைக்கின்றனர். லேமினா என்பது முதுகெலும்பின் ஒரு பகுதியாகும். இது முதுகெலும்பின் பின்புறத்தில் உருவாகி முதுகெலும்பின் பின்புறத்தைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் ஏற்பட்டு அறுவை சிகிச்சை. லேமினெக்டோமி அறுவைசிகிச்சை செய்வதன் மூலம் மனித உடலின் லேமினா அகற்றப்படுகிறது. லேமினெக்டோமி அறுவைசிகிச்சை வழக்கமாக ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக செய்யப்படுகிறது. ஸ்பைனல் ஸ்டெனோசிஸிஸ் என்பது முதுகெலும்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் ஒரு சிக்கலாகும்.


ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் சிக்கல் ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு, லேமினெக்டோமி சிகிச்சை மிகவும் தேவைப்படுகிறது. ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் சிக்கலினால் ஏற்படும் அறிகுறிகளின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது. அவை முதுகில் வலி மற்றும் பிடிப்பு உண்டாகும். கால்கள், தொடைகள், கழுத்து, தோள் தசைகள் மற்றும் கைகளில் வலி உண்டாகும். குடல் மற்றும் சிறுநீர்ப்பைத் தொடர்பான சிக்கல்கள். நடைபயிற்சி, வளைதல் போன்ற உடல் செயல்பாடுகளைச் செய்யும்போது ஏற்படும் வலி. சியாட்டிகா உண்டாகும், சியாட்டிகா என்பது கீழ் முதுகில் இருந்து கால் வரை கீழே செல்லும் வலியாகும். கைகால்கள் பலவீனம் அடைகின்றன. உடலின் சமநிலை மாறுபடுகிறது. முதுகெலும்பில் நோய்த்தொற்று உண்டாகும். ட்ரோமா ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். முதுகெலும்பு மிகவும் பலவீனமாகவோ, கடுமையான ஸ்கோலியோசிஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த நபருக்கு லேமினெக்டோமி அறுவை சிகிச்சை செய்ய இயலாது.


லேமினெக்டோமி செய்வதற்கு முன்பு மருத்துவர்கள் ஸ்பைனல் ஸ்டெனோசிஸ் நோயாளியை முழுமையாகப் பரிசோதனை செய்கின்றனர். இந்தப் பரிசோதனையின் போது மருத்துவர்கள் நோயாளியிடம் நடப்பது, எழுந்து நிற்பது, முன்னோக்கி மற்றும் பின்னோக்கி வளைவது போன்ற எளிய உடல் செயல்பாடுகளை செய்ய அறிவுறுத்துகின்றனர். அதன் பின்னர் வலியின் தீவிரத்தின் அடிப்படையிலும் பரிசோதனை செய்கின்றனர். மேலும், முதுகெலும்புகளில் தேய்மானம் ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய எக்ஸ்ரே செய்கின்றனர். இது தவிர, வேறு சில பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன. 

Input & Image courtesy:Logintohealth

 


Tags:    

Similar News