40 ஆயிரம் கூட கட்ட முடியாதவன் எதுக்கு டாக்டருக்கு படிக்கணும் ? : துரைமுருகனின் திமிர் பேச்சு..!

40 ஆயிரம் கூட கட்ட முடியாதவன் எதுக்கு டாக்டருக்கு படிக்கணும் ? : துரைமுருகனின் திமிர் பேச்சு..!

Update: 2020-11-23 11:06 GMT

தமிழக முதல்வர் அறிவித்த 7.5% இட ஒதுக்கீடு மூலமும், நீட் தேர்வு மூலமும் பல ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறியுள்ளது. 7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் அரசு கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் சில மாணவர்கள் உள்ளனர். 

7.5% இட ஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்தும் அரசு கட்டணம் கூட செலுத்த முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தி.மு.க-வை அணுகினால் தி.மு.க உதவி புரியுமா என்று செய்தியாளர் ஒருவர் துரைமுருகனை கேட்டுள்ளார். அதற்கு அவர் 40,000 கூட கட்ட முடியாதவன் எதற்கு மருத்துவம் படிக்கணும் என்று ஆணவத்துடன் பேசினார். அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பலரின் விமர்சனத்திற்கும் ஆளாகி உள்ளது. 


உள் ஒதுக்கீடு மூலம் தனியார் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கட்டணத்திற்கு தி.மு.க உதவி புரியும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரியில் சேரும் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிவீர்களா என்று கேட்டால், தி.மு.க-வின் பதில் ஆணவமாக இருக்கிறது. இதன் மூலம் தி.மு.க ஏழை மக்களின் விரோதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News