முன்னாள் அதிபரைக் கொல்ல முயன்றவர்கள்: இலங்கை சிறையில் இருந்த 8 தமிழர்கள் விடுதலை!

முன்னாள் அதிபர் கொலை வழக்கில் கைதான இலங்கை சரியில் இருந்து வந்த 8 தமிழர்கள் விடுதலை ரணில் விக்ரமசிங்கே நடவடிக்கை.

Update: 2022-10-27 02:34 GMT

முன்னாள் அதிபரை கொல்ல முயன்றவர்கள்:

இலங்கையில் 1994 முதல் 2005 வரை அதிபராக இருந்தவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவரை கொல்ல முயற்சி நடத்தது. இது தொடர்பாக விடுதலை புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்ட இருந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று தமிழ் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருந்தார்கள். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அதிபர் விக்ரமசிங்கி முடிவு செய்தார். எனவே இது தொடர்பாக முன்னாள் அதிபர் சந்திப்பில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.


பிரதமருக்கான சிறப்பு அதிகாரம்:

அதனை தொடர்ந்து அந்த மூன்று பேரும் விடுதலை செய்யப் பட்டுள்ளார்கள். அதேபோல் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படுவார்களாகின் மேலும் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் சாசனம் 34 வது பிரிவின் கீழ் அதிபருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகளில் அறிக்கை கூறியுள்ளது.


எம்.பிகளின் பேச்சு வார்த்தை பலன்:

தமிழ் எம்.பிக்களுடன் பல்வேறு சந்திப்புகளில் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தை பலனாக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக விடுவிக்கப்பட்ட இந்த கைதிகள் ராணுவ அமைச்சகம் சார்பில் விசாரணை நடத்தியும் ஒப்புதல் பெற்று எட்டு கைகள் விடுவிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News