கிறிஸ்துமஸ் விழாவால் ஒமைக்ரான் வைரஸ் அதிகரிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை!
தென்னாப்பிரிக்காவில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது அந்த வகை வைரஸ் 89 நாடுகளை ஆக்கிரமித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கு முன்னர் அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்தது. இதனால் ஒமைக்ரான் வைரஸ் தொற்றும் கடந்த முறையை போன்று நாடு முழுவதும் ஆக்கிரமித்துவிடும் என்ற எண்ணத்தில் விஞ்ஞானிகளையும், மருத்துவக்குழுக்களையும் களத்தில் இறக்கிவிட்டு கண்காணித்து வருகின்றது.
இந்நிலையில், பிரபல அமெரிக்கா தொற்றுநோய் சிறப்பு நிபுணர் அந்தோணி பவசி செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதில் சந்தேகம் வேண்டாம். தற்போது உலகளவில் ஒமைக்ரான் ஆக்கிரமித்துள்ளது. கிறிஸ்துமஸ் விழாவுக்கு வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்வதால் வேகமாக ஒமைக்ரான் பரவும் ஆபத்து உள்ளது. எனவே அடுத்து ஒரு சில வாரங்களில் மருத்துவமனையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போடுவது கட்டாயம். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Daily Thanthi
https://www.dailythanthi.com/News/TopNews/2021/12/21055017/With-the-Christmas-trip-Omicron-dispersal-may-increase.vpf