பாகிஸ்தான் சுதந்திர தின விழாவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஆசாதி சவுக் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடியுள்ளனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண்ணை தூக்கி வீசுவதும், உடமைகளை கழற்றியும், கொடுமைப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

Update: 2021-08-19 03:02 GMT

பாகிஸ்தானில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை முன்னிட்டு வீடியோ எடுக்கச் சென்ற இளம்பெண்ணை சராமாரியாக தாக்கி, பாலியல் ரீதியாக துன்புறுத்திய 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் உள்ள ஆசாதி சவுக் பகுதியில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி ஆகஸ்ட் 14ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடியுள்ளனர். அப்போது அந்த கூட்டத்தில் இருந்த ஒரு இளம்பெண்ணை தூக்கி வீசுவதும், உடமைகளை கழற்றியும், கொடுமைப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோவை பார்த்த பாகிஸ்தான் பெண்கள் அமைப்பு, உடனடியாக பிரதமர் இம்ரான்கான் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 

மேலும், போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, எங்கள் யூ டியூப் சேனலுக்காக சுதந்திர தின விழாவை பதிவு செய்ய சென்றோம். அப்போது இளைஞர்கள் என்னை கிண்டல் செய்ததுடன் மட்டுமின்றி ஒன்றுகூடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் பயந்து அருகே உள்ள பூங்காவிற்கு ஓடி சென்றேன் அங்கேயும் விடாமல் துரத்தி வந்து ஆடைகளை கிழித்து என்னை தூக்கி போட்டு விளையாடினார்கள்.

எங்களுடன் வந்தவர்களையும் தாக்கினர், எனது போன் மற்றும் மோதிரத்தையும் பறித்துக்கொண்டனர் எனக்கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுதந்திர தின விழாவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பாகிஸ்தானை மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2826167

Tags:    

Similar News