பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை ! -ஆய்வில் அதிர்ச்சி தகவல் !
பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.;
பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று 35 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு பற்றி கராச்சி நகரை சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நகரங்களில் உள்ள 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் சொல்லும்போது 35 சதவீதம் பேர் பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனக் கூறியுள்ளனர். 45 சதவீதம் பேர் பெண்கள் ஓரளவிற்குத்தான் பாதுகாப்பாக உள்ளதாகவும், 20 சதவீதம் பேர் பெண்கள் முழுமையான பாதுகாப்பில் இருப்பதாக கூறியுள்ளனர்.
மேலும், கைபர் பக்துன் இக்வா என்ற பகுதியில் பெண்களுக்கு துளிக்கூட பாதுகாப்பு இல்லை என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதே போன்று 19 சதவீத பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறியுள்ளனர்.
Source: Dinamalar
Image Courtesy: Opindia