பெண்கள் வாழ்க்கை போராட்டமா? அல்ல ஒரு நாள் கொண்டாட்டமா?

மகளிர் தினத்தில் மட்டுமே கொண்டாடப்படும் பெண்கள் வாழ்க்கை போராட்டமா? அல்லது கொண்டாட்டமா?

Update: 2022-03-09 01:48 GMT

பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் போராடிதான் இறுதியில் அதை பெற வேண்டி இருக்கின்றது. எனவே மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படும் மகளிர் தினமும் அப்படிப்பட்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்தது தான். உழைக்கும் பெண்களுக்கு சம ஊதியம் தரவேண்டும், வாக்களிக்கும் உரிமை தர வேண்டும் என 15,000 உழைக்கும் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர். இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அதுவும் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு தான். 


இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் கிளாரா ஜெட்கின். சர்வதேச உழைக்கும் பெண்கள் மாநாட்டில் இந்த கருத்தை முன்வைத்தார். அந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல் ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 2022, 108-வது பெண்கள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


உலகிலேயே தற்போது மிகப்பெரிய பரபரப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது உக்ரைன் மீது ரஷ்யா நடத்திக் கொண்டிருக்கும் தாக்குதல் தான். உக்ரைனில் பல்வேறுபட்ட அப்பாவி மக்களும் இந்தப் போரினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். ஆனால் இதே வேளையில் ரஷ்யாவின் அதிபராக ஒரு பெண் இருந்து இருந்தால் இதன் நிலைமையே வேறு ஒன்றாக இருந்திருக்கும்? காரணம் பெண்களுக்குள் தாய்மை என்ற உணர்வு உள்ளது. இதன் காரணமாக போர்களையும் மக்கள் போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம்தான். போராட்டக்களத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களும் ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல, ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் தான். 

Input & Image courtesy:BBC news

Tags:    

Similar News