உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம் இந்தியாவில்: திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பார்மை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

Update: 2023-03-13 00:38 GMT

கர்நாடகாவில் உள்ள ஹூப்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தருட சுவாமிஜி ரயில் நிலையத்தில் சுமார் 1.5 கிலோமீட்டர் உலகின் மிக நீளமான ரயில்வே நடைமேடை இன் திறப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கீழ் நடைபெற்றது. இதை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 12 அன்று காலை திறந்து வைத்தார். இந்த தளத்தின் கட்டுமான பணிகள் சுமார் 20.1 கோடி செலவில் அக்டோபர் 2019-ல் தொடங்கி ஏப்ரல் 2020ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. ரயில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் துவக்கத்திலிருந்து இதன் இயக்கம் துவங்கியது. மார்ச் 12ஆம் தேதி மாண்டியாவில் பிரம்மாண்டமான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடத்துகிறார்.


பின்னர் ஐ.ஐ.டியின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்திருக்கிறார். அதே மேடையில் தான் இந்த உலகின் மிக நீளமான பிளாட்பாரத்தை தற்போது திறந்து வைத்து இருக்கிறார். மேலும் 13 கோடியில் மேம்படுத்தப்பட்ட விஜயநகர் ரயில் நிலையமும் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் நிலைய பிளாட்பார்ம் தற்போது திணைக்காட்டு வழித்தடத்தில் 245 கிலோமீட்டர் முற்றிலும் மின்மயமாக்கல் பணி முடிந்து அதன் திறப்பு விழாவும் நடைபெற்று இருக்கிறது. இங்குள்ள ரயில் நிலையத்தின் ஒன்றாவது மேடை 550 மீட்டர் நீளம் கொண்டது.


இது 10 மீட்டர் அகலத்துடன் நீடிக்கப்பட்டு இருக்கிறது. இது உலகின் மிகவும் நீளமான தளமாக உருவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மிகவும் நீளமான நடைமேடை கிழக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள கோரக்பூர் நிலையத்தில் ரயில்வே நடைபெற இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த ஒரு நடைமேடை உலகின் மிக நீள நடைமேடையாக உருவெடுத்து இருப்பதால் குறிப்பிடத்தக்கது.

Iinput & Image courtesy: Asianet News

Tags:    

Similar News