உலகிலேயே முதன் முறை: ரஷ்யாவில் விலங்குகளுக்கு வெற்றிகரமான கொரோனா தடுப்பூசி.!
ரஷ்யாவில் விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஒரு கோடிக்கும் அதிகமானோர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்காக இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி வெற்றிகரமாக தயாரித்து மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது விலங்குளையும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு என்று ரஷ்யா கொவாக் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி முதல் முறையாக விலங்கிற்கு செலுத்தப்பட்டது. ரஷ்ய ராணுவத்தில் இடம்பெற்றுள்ள செல்லப்பிராணி நாய்களுக்கு தடுப்பூசி முதல் டோஸ் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வருகிறது.