உலகின் பணக்கார பிச்சைக்காரர்- மும்பையில் 1.5 கோடிக்கு வீடா?
உலகின் பணக்கார பிச்சைக்காரர் ஒரு இந்தியர். அவர் சொத்து மதிப்பு எவ்வளவு என கேட்டால் அதிசயித்து தலைசுற்றும் வண்ணம் உள்ளது.
பிச்சைக்காரன்’ என்ற வார்த்தை, மிகவும் வறுமையில் வாடும் மக்களைக் குறிப்பிடுகிறது. அழுக்கான உடை, ஒல்லியான தேகம், பரிதவிக்கும் முகம் என அவர்களைப் பார்க்கும் போதே அவர்களின் அன்றாட வாழ்க்கை முறையை அறிந்துக் கொள்ளலாம்.ஆனால், பிச்சையெடுப்பதை லாபகரமான தொழிலாக மாற்றும் சிலர் இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
ரிக்ஷாமாமா படத்தில் பிச்சை எடுக்கும் பெண், அந்தப் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய வருவார். அதை தினமும் கவனித்து வரும் கவுண்டமணி அந்தப் பெண் வங்கி ஊழியர் என நினைத்து காதல் கொள்வார். கிட்டத்தட்ட அந்த மாதிரி சம்பவம் தான் இது. மும்பையில் வசிக்கும் பாரத் ஜெயின் என்பவர், இந்தியா மட்டுமல்ல, உலகிலேயே பணக்கார பிச்சைக்காரர். நிதி நெருக்கடியின் காரணமாக பாரத் ஜெயின் கல்வியைத் கைவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரத் ஜெயினுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இருப்பினும் தனது குழந்தைகள் இருவரையும் வெற்றிகரமாக படிக்க வைத்துள்ளார். பாரத் ஜெயின் நிகர மதிப்பு 7.5 கோடி என்று கூறப்படுகிறது. அவரது மாத வருமானம் ரூ.60,000 முதல் 75,000 வரை இருக்குமாம். மும்பையில் ரூ.1.4 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை பாரத் ஜெயின் வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு அவர் தானேயில் இரண்டு கடைகளையும் வாங்கியுள்ளார், அதன் மூலம் அவருக்கு மாத வாடகை 30,000 ரூபாய் கிடைக்கிறது.
SOURCE : NEWS