இணைய வழி பரிவர்த்தனை கருப்பு பணத்தை ஒழிக்கும் - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இணைய வழி பணப்பரிவர்த்தனை கருப்பு பணத்தை நிச்சயம் ஒலிக்கும் என்று மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
பட்டியலிடப்பட்ட வங்கிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 10,09,511 கோடி வாரா கடன் செயல்படாத சொத்தாக வரையறுத்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்து இருக்கிறார். பட்டியலிடப்பட்ட வங்கிகளின் வாரா கடன் குறித்த விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வாரா கடனை வங்கிகளின் முதலீட்டை மேம்படுத்தவும் மற்றும் பரிசுத்த பெறவும் கணக்கு அறிக்கைகளை சீர்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும் RBI தரவு அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் 4 கோடியே 80 லட்சத்தி 111 கோடி வாரா கடனை வசூலித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். சிறுசேமிப்பு முதலீட்டாளர்கள் வங்கி சேமிப்பாளர்களின் பணத்தை கடனாக வங்கிகள் வழங்கி வருகிறது. அக்கடனை பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்களின் வார கடனை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவர் குறிப்பிட்டு இருந்தார். பல்வேறு சட்ட சிக்கல் உள்ளதால் முடக்கப்பட்ட சொத்துக்கள் மூலமாக வாரா கடனை மீட்பதில் தற்போது தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் அத்தகைய பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் இது தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், நாட்டின் புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ஆண்டிற்கு 7.98% அதிகரித்து 31.92 கோடியாக அதிகரித்து இருக்கிறது. அந்த எண்ணிக்கையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி படவிக்கம் இனிய வழி பண பரிவர்த்தனை உள்ளிட்டவை சார்ந்த அமைந்துள்ளது. புழக்கத்தில் உள்ள நோட்டுகளின் எண்ணிக்கை குறித்து இணைய வழி பண பரிவர்த்தனை அதிகரிப்பதை மத்திய அரசின் இலக்கு. இதன் மூலம் கருப்பு பணப்புழக்கத்தை ஒழிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
Input & Image courtesy: Maalaimalar