அயோத்தி ராம் லீலா போல மதுராவில் கிருஷ்ண லீலா - யோகி அரசின் மெகா திட்டம்!

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மதுராவில் கிருஷ்ண லீலா நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது.

Update: 2022-05-21 01:20 GMT

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராம் லீலா நிகழ்ச்சி அமைவது, போல் தற்போது மதுராவில் கிருஷ்ண லீலா நிகழ்ச்சி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் தலைமையில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரப் பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள இத்தகைய முயற்சிக்கு உலக அளவில் உள்ள பல்வேறு பக்தர்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து உள்ளார்கள். இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏராளமான கிருஷ்ண பக்தர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இப்பகுதியின் சுற்றுலாத் திறனையும் அதிகரிக்கும். 


கிருஷ்ண லீலாவை மதுராவில் ஏற்பாடு செய்ததற்கு முதல்வர் யோகிக்கு மதுரா-பிருந்தாவனின் பா.ஜ.க எம்எல்ஏ ஸ்ரீகாந்த் சர்மா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மதுரா மாவட்டத்தில் உள்ள பிரஜ் பகுதியில் பிறந்த கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளை பாதுகாக்கவும், அந்த பகுதியில் உள்ள சாலைகளுக்கு அவர்களின் பெயர் சூட்டப்படும் என்றும் யோகி அரசு முடிவு செய்துள்ளதாக டைனிக் பாஸ்கர் தெரிவித்துள்ளார் .


பிரஜ் மொழியில் உள்ள இலக்கியங்கள் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும், இது பிராந்தியத்திற்கு வரும் வெளிநாட்டு பக்தர்களை எளிதாக அணுகும் முயற்சியில் இருக்கும். உத்திரபிரதேசத்தில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து அனைத்து தரப்பிலிருந்தும் இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.. 

Input & Image courtesy: Swarajya News

Tags:    

Similar News