போதைப் பொருளை வீட்டுக்கு வந்து டெலிவரி செய்த சொமாட்டோ ஊழியர்!
சென்னையில் போதை பொருளை வீட்டிற்கு வந்து டெலிவரி செய்து சொமாட்டோ ஊழியர் கைது.
சென்னையைச் சேர்ந்த சொமாட்டோ ஊழியர் ஒருவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக ரகசிய தகவலின் படி, கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து தற்போது அந்த நபரை கைது செய்து உள்ளார்கள். குறிப்பாக தனிப்படை அமைத்துக் கொண்டு சார் மொபைல் மூலம் தொடர்பு கொண்டு தங்களுக்கு போதை மாத்திரை வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். அதை எடுத்து அந்த நபர் போதை மாத்திரைகளை எடுத்து வந்து கொண்டு கையும், களவுமாக மாட்டிக் கொண்டுள்ளார். விசாரணையில் அந்த நபர் சென்னை அருகம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள காலணியை சேர்ந்த 20 வயது நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஆன்லைன் டெலிவரி மூலமாக உணவுகளின் வீட்டுக்கு வழங்கி வரும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும் இவர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும் போதை மாத்திரைகளை வீட்டுக்கு சென்று டெலிவரி செய்தால் அதிக அளவு பணம் தருவதாகவும் அவருடைய பேச்சைக் கேட்டு தற்போது இந்த செயலில் இவர் ஈடுபட்டுள்ளார்.
டொமேட்டோவின் போதை மாத்திரைகள் எடுத்துச் சென்றாள் காவலர்களுக்கு சந்தேகம் வராது என்பதன் பெயரில் பணத்திற்கு ஆசைப்பட்டு டெலிவரி என்ற பெயரில் தற்போது இந்த செயலை இந்த இளைஞர் செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து முனிய சாமியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 619 மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜி என்பவரையும் தற்போது தேடி வருகிறார்கள்.
Input & Image courtesy: News 18