"தி.மு.க தலைவர் ஸ்டாலினால் சுயமாக முடிவு எடுக்க முடியாது, அவரால் எந்த பயனும் இல்லை" - முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி!
"தி.மு.க தலைவரால் சுயமாக எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது. ஏனெனில், அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார். தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வர முடியாது. அப்படியே வந்தாலும், அவரால் எந்தப் பயனும் இல்லை" என தெளிவாக கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி.
10 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கவில் இணைந்தார். தி.மு.கவின் விவசாய அணிச் செயலாளராகப் பதவி வகித்துவந்த இவர், தி.மு.கவின் குடும்ப அரசியலால் புறக்கணிக்கப்பட்டார். பின்னர் விலகி மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். இந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை எதிர்த்தும் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதவது, "அ.தி.மு.க அரசு அமைந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்தால், தி.மு.க தலைவரால் சுயமாக எந்த முடிவையும் மேற்கொள்ள முடியாது ஏனெனில், அவர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார். தி.மு.க தலைவர் ஆட்சிக்கு வர முடியாது அப்படி வந்தாலும், அவரால் எந்தப் பயனும் இல்லை. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.கவிலுள்ள இரண்டரைக் கோடி தொண்டர்களின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், அடித்தட்டு மக்களின் நலனுக்கன ஆட்சி அ.தி.மு.க ஆட்சி" என்று கூறினார்.
ஏற்கனவே ஸ்டாலின் கிச்சன் கேபினட்தான் வேட்பாளர்கள் முதல் கட்சி பதவி வரை முடிவு செய்கிறது என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் முன்னாள் அமைச்சரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.