மிசாவையே பார்த்த திமுக'வை ஆட்டி படைக்கும் வாக்கு இயந்திரம் - கன்டெய்னரை பார்த்தாலே பீதியாகும் உபிஸ்!

Update: 2021-04-19 07:13 GMT

கருத்துக்கணிப்புகள் எல்லாம் திமுகவுக்கு தான் வெற்றி என்று கணித்தாலும் உபிக்கள் என்னவோ ஒரு வித பீதியில் தான் திரிகின்றனர். மொபைல் டாய்லட், கன்ஸ்ட்ரக்ஷன் சைட் அலுவலகம் என்று கன்டெய்னர் சைசில் எதைப் பார்த்தாலும் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்யத் தான் நிறுத்தி இருக்கிறார்கள் என்று பதறி தங்களை தாங்களே கலாய்த்து வருகின்றனர்.


இதில் உச்சம் என்னவென்றால் நான் அமெரிக்காவில் படித்தேன்‌, சிங்கப்பூரில் வேலை பார்த்தேன் என்றும், தாத்தா அது செய்தார், அப்பா இது செய்தார் என்றும் தற்பெருமை பேசும் வழக்கம் கொண்ட திமுக ஐடி விங் செயலர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனும் உபிக்கள் அளவுக்கு இறங்கியது தான்.

இது போதாதென்று திமுக தலைவர்‌ ஸ்டாலினும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு பலர் "கணிணி கற்பிப்பவர்கள்" என்ற பெயரில் "வெளியில் சொல்லப்படாத" காரணங்களுக்காக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்" என்று அறிக்கை விட்டு கதறினார்.

உறுதியாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இப்போதே முதல்வர் ஆகி விட்டது போல் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று வீர வசனம் பேசியவர்கள் இப்போது ஏன் இப்படி பாதுகாப்பு அறைக்கு கரப்பான் பூச்சி வந்தால் கூட கதறுகிறார்கள் என்று நெட்டிசன்கள் இவர்களை கேலி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது உபிக்கள் எவ்வாறு 'விழிப்புடன்' இருக்க வேண்டும் என்று கைடு போட்டது மட்டுமல்லாமல் ஜூம் மீட்டிங் வேறு வைத்து விளக்கமளிக்கப் போகிறார்களாம். ஏற்கனவே இணைய உபிக்கள் தேர்தல் முடிவுகள் மாறினால் வாக்கு இயந்திரத்தை கொளுத்தி விடுவோம் என்று பேசிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சந்திப்பு மூலம் திமுக தலைமை என்ன உத்தரவு பிறப்பிக்க இருக்கிறதோ என்று சாமானியர்கள் பீதியில் இருக்கின்றனர்.

Similar News