கொடைக்கானலில் ஆற்றை ஆக்கிரமிக்க முயன்ற தி.மு.க முன்னாள் கவுன்சிலர் - சில நாட்கள் தி.மு.க தலைவர் அங்கு தங்கியிருந்ததால் வந்த விளைவா?

Update: 2021-04-23 05:45 GMT

கொடைக்கானலில் முன்னாள் தி.மு.க வார்டு கவுன்சிலர் ஆற்றை ஆக்கிரமித்து கடையை கட்ட முயன்று அதனை அரசு அதிகாரிகள் இடித்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மோகன் என்பவர் தனது கடையை கட்ட முயற்சி செய்துள்றார். மேலும் அங்கு ஓடும் ஆற்றில் தனது ஆக்கிரமிப்பையும் அஸ்திவாரம் போட முயன்றுள்ளார்.

இதற்கு முன்னாள் கவுன்சிலர் மோகன் மற்றும் அவரது மருமகன் வசந்த் ஆகியோர் இரவோடு இரவாக கடைகளை கட்ட யாருக்கும் தெரியாமல் பணியை துவங்கினர்.

இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர் உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மோகனின் ஆறு ஆக்கிரமிப்பு பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அக்கிரமிப்பையும் அகற்றினர்.

11 மணிக்கு ஆட்சிக்கு வந்தால் 11.05'க்கு மணல் திருடலாம் என தி.மு.க'வை சேர்ந்த செந்தில் பாலாஜி'யே பிரச்சாரத்தில் கூறி வந்தது தி.மு.க'வினருக்கு இதுபோல் தைரியத்தை வரவழைத்திருக்கலாம் என மக்கள் சந்தேகப்படுகின்றனர்.

Similar News