சமானிய மக்களை தடுத்துவிட்டு ஸ்டாலின் மகள் செந்தாமரைக்கு திருவண்ணாமலை கிரிவல சிறப்பு அனுமதி அளித்த நிர்வாகம்!

Update: 2021-04-27 05:00 GMT

சட்டங்களும், பேரிடர் கால அரசாங்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முதல் கடைகோடி மனிதர்கள் என அனைவருக்கும் பொருந்தும். இவ்வாறு இருக்கையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக "சித்ரா பவுர்ணமி" விஷேச நாளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் வழக்கமாக கிரிவலம் செல்லும் பக்தர்கள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் உத்தரவின் பெயரில் நேற்று முன்தினம் முதலே தடுத்து நிறுத்தப்பட்டனர். கிரிவலப்பாதை காவல் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு மக்கள் உள்ளே புக முடியாத அளவிற்கு காவல்துறை கெடுபிடியாக நடந்துகொண்டது.

ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை எந்த கெடுபிடியும் இல்லாமல் சுதந்திரமாக நேற்று சித்ரா பவுர்ணமி'யை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்தார். தி.மு.க'வின் திருவண்ணாமலை பகுதி குறுநில மன்னர் போல் செயல்படும் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே.கம்பன் ராஜமரியாதையுடன் ஸ்டாலின் மகள் செந்தாமரையை கிரிவலம் அழைத்து சென்றார்.

கொரோனோ எனும் கொடிய நோய் மக்களை ஆட்டி படைக்கையில் மக்கள் கூடும் இடங்களில் கூடுவதை தவிர்க்க கிரிவலம் போன்ற நிகழ்ச்சிகள் தடை செய்யப்படும்போது சாமானிய மக்கள் செல்ல கூட தடை இருக்கும்போது எந்த அரசாங்க பதவியிலும் இல்லாத, அரசால் அனுமதிக்கப்படாத பொறுப்பில் இல்லாத செந்தாமரை தி.மு.க தலைவரின் மகள் என்ற ஒரே காரணத்தினால் எப்படி இவ்வாறு தடையை மீறி கிரிவலம் வரமுடிந்தது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பதிலளிப்பாரா?

Similar News