"இந்த முறை ஏமாந்துவிட கூடாது" என அனைத்து வேட்பாளர்களையும் இன்று கூட்டத்திற்கு அழைத்த தி.மு.க தலைமை
கடந்த ஏப்ரல் 6'ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததது. இதனை தொடர்ந்து வரும் மே 2'ம் தேதி அதாவது இன்னும் இரு தினங்களில் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சியமைக்கும் என கருத்து கணிப்புகள் வெளிவந்தாலும் உள்ளூர தி.மு.க பயத்தில் இருப்பது தெரிகிறது. இதன் வெளிப்பாடாக இன்று (30/04/21) தி.மு.க'வின் ஆலோசனை கூட்டம் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கையில் நிர்வாகிகள் நடந்துகொள்ளும் விதம், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள், கருத்து கணிப்பு முடிவுகளை நம்பி போன முறை ஏமாந்து நின்றது போல் இந்ந முறையும் ஏமாறாமல் இருப்பது என அனைத்தும் விவாதிக்க இருப்பதாக அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டதில் தி.மு.க'வின் வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், இரண்டாம் கட்ட தலைவர்கள் என அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாம்.
மேலும் தேர்தல் முடிவு வரும் வேளையில் அதிருப்பதியாளர்களை வைத்துகொண்டால் அது தமக்கே ஆபத்து என தி.மு.க தலைமை உணர்ந்து இந்த அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக மேலும் சில தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன.