"உங்க வீட்டு புள்ளையா நினைச்சு விட்ருங்க இனி தொகுதில வேலை பார்க்க வேண்டும்" என தர்மபுரி மாவட்ட தோல்வியை ஒப்புக்கொண்ட தர்மபுரி எம்.பி. செந்தில்குமார்!
தர்மபுரி எம்.பி.செந்தில்குமார் தர்மபுரி மாவட்டத்தில் மொத்த தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி முன்னிலை பெற்றதற்கு பொறுப்பேற்று இனி நன்றாக வேலை செய்ய வேண்டும் என ஒப்புக்கொண்டுள்ளார்.
தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் தொகுதியில் வேலை செய்கிறாரோ இல்லையோ ட்விட்டரில் கடுமையாக வேலை செய்வார், யாராவது ஆர்வக்கோளாரில் ட்விட் செய்தால் போதும் அவர்களை விட இவர் எம்.பி என்பதே மறந்து உடனே ஆதீத ஆர்வக்கோளாரில் கிளம்பி விடுவார். அப்படி உழைத்ததன் பலனாக தொகுதியில் கட்சி வேலை என்றால் என்ன என்பதையே மறந்துபோனார் விளைவு தர்மபுரி மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது.
இதனை தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "தர்மபுரியில் 5 தொகுதிகளிலும் கணிசமான வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளோம்
முன்னணியி உள்ள 3 அதிமுக மற்றும் 2பாமக வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்🎉
தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்
இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது
கடுமையாக பாடுபடுவதோடு,
தர்மபுரியில் புதுமையான மாற்றங்களையும் காணலாம்" என பதிவிட்டுள்ளார்.
இனிமேலாவது ட்விட்ரில் களமாடுவதை விட்டுவிட்டு தொகுதி பக்கள் செல்லுங்கள் என தி.மு.க இணைய உடன்பிறப்புகளே அவரிடம் கமெண்ட் செய்து வருகின்றனர்.