"அடிமை அரசு கடிதம் எழுதுவதால் என்ன பயன் என கேட்ட ஸ்டாலின் இன்று பதவியேற்ற அன்றே கடிதம் எழுதுகிறார்" - நாராயணன் திருப்பதி!
"அடிமை அரசு கடிதம் எழுதுவதால் என்ன பயன் என கேட்ட ஸ்டாலின் இன்று பதவியேற்ற அன்றே கடிதம் எழுதுகிறார்" என நாராயணன் திருப்பதி ஸ்டாலின் மீது விமர்சனத்தை வைத்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நாள்களில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பதிவில், "வன்மையாக கண்டிக்கிறேன். அவசரமாக ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு,புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்க்கான இருப்பிடம்,உணவு,குறித்து எந்த அறிவிப்பையும் செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது. "நம் தமிழகத்தின் கட்டமைப்புகளுக்கு உதவிய"(@mkstalin கூறியது) அவர்களை நட்டாற்றில் விடுவது நியாயமா? எனப்பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில், ''மத்திய அரசுக்கு, 'அடிமை அரசு' கடிதம் எழுதுவதால் என்ன பயன்? என்று கேட்ட அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்வராக பதவியேற்ற அன்றே மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்" என ஸ்டாலின் மீது விமர்சனம் வைத்துள்ளார்.