"எங்களுக்கும் நிரந்தர கவர்னராக தமிழிசை வேண்டும்" - அகில இந்திய முஸ்லீம் முன்னேற கழகம் வேண்டுகோள்!
"எங்களுக்கு தமிழிசையே நிரந்தர கவர்னராக வேண்டும்"என புதுச்சேரியை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பங்காரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "புதுவை கவர்னராக பொறுப்பு ஏற்ற தமிழிசை சவுந்தரராஜன் நம் புதுவை மாநில நலனில் அக்கறை கொண்டு தூய தமிழிலே அனைத்து மக்களிடம் பேசி குறைகளை தீர்த்து வருகிறார். அனைத்து அதிகாரிகளையும் அழைத்து பேசி அரசு துறைகளை சிறப்பாக இயக்குகிறார்.
டாக்டர் என்ற அடிப்படையி லும் சுகாதாரத் துறையை நேரில் சென்று கண்காணித்து அவர் எடுத்த சீரிய முயற்சி யினால் புதுவை மக்கள் நலமாக இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மலிவு விலையில் உணவு, ஒரு ரூபாய்க்கு முகக்கவசம், ஏழை குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் 5 கிலோ உணவு தானியம் போன்ற பல நலத்திட்டங்களையும் உடனுக்குடன் கிடைக்க செய்து அனைத்து சமுதாய மக்களை தாயுள்ளத்தோடு வழிநடத்திச் செல்கிறார்." நம் மாநில மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் தமிழிசை சவுந்தரராஜனை புதுவையின் நிரந்தர கவர்னராக மத்திய அரசு நியமிக்கவேண்டுமென்று ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கை வைக்கிறேன்" இவ்வாறு அவர் கூறி உள்ளார்.